ஸ்ரீவில்லிபுத்தூரில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கான விருதுநகர் மாவட்ட தலைமை அலுவலக கட்டிட கட்டுமானபணிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

அதிமுக முன்னாள் அமைச்சரும் , விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி உதவி என்று யார் கேட்டு வந்தாலும் இல்லை என கூறாமல் நாள்தோறும் பல்வேறு நிதி உதவிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கான
விருதுநகர் மாவட்ட தலைமை அலுவலக கட்டிட கட்டுமானபணிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திருத்தங்களில் உள்ள தனது இல்லத்தில் வைத்து முதற்கட்டமாக 5 லட்சம் நிதியுதவியாக ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களிடம் வழங்கினார். நிதியுதவி பெற்றுக்கொண்ட ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் ராஜேந்திரபாலாஜிக்கு மனதார நன்றி தெரிவித்துக் கொண்டனர்.





