• Mon. Feb 23rd, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா..,

ByS. SRIDHAR

Feb 23, 2026

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி முழுவதும் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு அஇஅதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி k.பழனிச்சாமி அவர்களின் உத்தரவின் பேரில் முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர் சி விஜயபாஸ்கர் அவர்களின் ஏற்பாட்டில் ஒரு வீடு-ஒரு கோலம்-ஒரு பரிசு என்ற மாபெரும் கோலப்போட்டி விராலிமலை தொகுதி முழுவதுமாக நடைபெற்றது.

இதில் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுமார் 90 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்தவர்கள் தங்களது வீட்டு வாசலில் பல்வேறு விதமான கோலங்களை வண்ணங்கள் தீட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர், குறிப்பாக இந்த கோலங்களில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர், செல்வி ஜெ ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட உருவங்களை படங்களாக வரைந்து வண்ணம் தீட்டி இல்லத்தரசிகள் தங்கள் வாசலில் வரைந்து இருந்தனர், அது மட்டுமில்லாமல் அதிமுக ஆட்சியிலும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் செய்த சாதனைகளையும் பட்டியலிட்டு பல்வேறு வீட்டு வாசலில் வாக்கியங்களாக இருந்து வைத்திருந்தனர்.

குறிப்பாக விராலிமலை முருகன் கோவில், காவேரி வைகை குண்டாறு திட்டம், 7.5 % இட ஒதுக்கீடு திட்டம், அம்மா மினி கிளினிக் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை தங்கள் வீட்டு வாசலில் ஓவியமாக வண்ணம் தீட்டி வரைந்து வைத்தனர் இந்த கோலப்போட்டியை முன்னிட்டு விஜயபாஸ்கர் தனது குடும்பத்துடன் சென்று பல்வேறு பகுதிகளில் மக்களை சந்தித்தார், அப்போது அங்கே வரைந்திருந்த கோலங்களை பார்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டும் அனைவருக்கும் சிறப்பு பரிசுகளையும் வழங்கி சிறப்பித்தார்கள்