• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கோவையில் காட்டெருமை தாக்கி வனக்காவலர் உயிரிழப்பு

BySeenu

Mar 12, 2025

கடந்த 10-ம் தேதி மாலை, கோவை தடாகம் வனப்பபகுதி, தோலம்பாளையத்தில் உள்ள விவசாய நிலத்திற்குள் வனத்துறை அதிகாரிகள் ஒரு காட்டு எருமையை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த காட்டெருமை தோலம்பாளையம் வனக் காவலர் அசோக் குமாரைத் தாக்கியதில் அசோக்குமார் படுகாயமடைந்தார்.

படுகாயமடைந்த அசோக்குமாருக்கு சீலியூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.