• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை..,

Byஜெ. அபு

Jul 20, 2025

தேனி மாவட்டம் கம்பம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுருளி அருவி சுற்றுலாத் தலமாகவும், ஆன்மீக தலமாகவும் விளங்கி வருகிறது.

இந்த அருவியில் ஏராளமான பொதுமக்கள் குளித்துவிட்டு, சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது .

இதனால் சுருளி அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, ஈத்தக்காடு , தூவானம் அணை பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் வனப்பகுதியில் உள்ள ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருவி அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் இரண்டாம் நாளாக தடை விதித்து உள்ளனர்.

அருவிப்பகுதியில் கன மழை பெய்து வருவதால் பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் எனவும், தகவல் வந்தவுடன் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை தரவேண்டும் வந்து ஏமாற்றம் அடைய வேண்டாம் எனவும் வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.