• Fri. Apr 26th, 2024

முதல் முறையாக ஆஸ்கர் விருது போட்டி பட்டியலில் நான்கு இந்திய படைப்புகள்

Byதன பாலன்

Dec 23, 2022

ஆஸ்கார் விருது பட்டியலுக்கு இந்தியாவிலிருந்து நான்கு பிரிவுகளுக்கு முதல் முறையாக இந்திய மொழிகளில் தயாரிக்கப்பட்ட படைப்புகள் போட்டிக்கான பட்டியலில் இடம் பிடித்துள்ளது
ஆஸ்கர் விருது இறுதி சுற்றுக்கான பரிந்துரை பட்டியலில் அசல் பாடல் பிரிவில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு கூத்து’ பாடலும், சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் குஜராத்தி மொழியில் வெளியான ‘செல்லோ ஷோ’ படமும் தேர்வாகியுள்ளன.
இவை தவிர, ‘ஆல் தட் ப்ரீத்ஸ்’ ஆவணப்பட பிரிவிலும், ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ ஆவண குறும்படப் பிரிவிலும் தேர்வாகியுள்ளதாக அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அறிவித்தது.ஆவணப்படம், ஆவண குறும்படம், சர்வதேச திரைப்படம்,ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம், இசை (அசல் ஸ்கோர்), இசை (அசல் பாடல்), அனிமேஷன் குறும்படம், லைவ் ஆக்க்ஷன் குறும்படம், ஒலி மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் என 10 பிரிவுகளில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேர்வுப் பட்டியலிலும் 10 முதல் 15 போட்டியாளர்கள் உள்ளனர்.95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா 2023 மார்ச் 12-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இறுதிப் பரிந்துரைகள் வரும் ஜனவரி 24-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *