• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தமிழர் தொன்மை வரலாற்று சிறப்பு 10ஆம் மாநாட்டிற்கு தமிழரின் தொன்மைக்கு சான்றாய்த் திகழும் கீழடியில் இருந்து சுடரோட்டம் துவக்கம்…

Byகுமார்

Sep 22, 2023

உலக தமிழர் பேரமைப்பின் சார்பில் தமிழர் தொன்மை வரலாற்று சிறப்பு 10ஆம் மாநாடு தஞ்சையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்காக தமிழரின் தொன்மைக்கு சான்றாய் திகழும் கீழடியிலிருந்து சுடரோட்டம் துவங்கப்பட்டது. இந்த சுடரோட்டத்திற்கு உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பானுமதி ஆத்மநாதன் தலைமையிலும் தமிழர் தேசிய முன்னணியின் மாவட்டத் தலைவர் கணேசன் முன்னிலையிலும் இராமன், பிச்சைகணபதி, அருணாசுந்தரராஜன் ஆகியோர் துவக்கி வைத்தனர் இந்த சுடரோட்டம் கீழடியில் துவங்கி மதுரை விளக்குத்தூண் பகுதியில் அமைந்துள்ளபாரதப் பெருந்தலைவர் காமராஜரின் சிலை வடக்கு மாசிவீதி நேரு ஆளாலவிநாயகர் சன்னதி சிம்மக்கல் வ உ சிதம்பரனார் சிலை தமுக்கம் பகுதியில் அமைந்துள்ள தமிழன்னை சிலையில் இருந்தும் புறப்பட்டு ஒத்தக்கடை பகுதியில் தேவர் சிலை முன்பும் அதனைத் தொடர்ந்து மேலூர் கக்கன் சிலை முன்பு இருந்தும் புறப்பட்டு சென்றது இந்த இந்த சுடரோட்ட நிகழ்ச்சியில் தமிழ் வீரர்களும் வீராங்கனைகளும் சுடரினை கையில் ஏந்தியவாறு சென்றனர். இந்த சுடரோட்டம் மாநாட்டு அரங்கத்தில்உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் ஐயா பழெ பழநெடுமாறன் அவர்களிடம் வழங்கப்படும்.