

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் அதிமுக முன்னாள் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, தெப்பக்குளம் சமுதாய கூடத்தில் ஒன்றிய கழகச் செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன், தலைமையில் சிறப்பு விருந்தினரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா, ஆகியோர் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். கழக கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு அன்னதானத்தினை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் அழகுராஜ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசன், கருப்பையா, மாணிக்கம், மாநில அம்மா பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல், ராஜேஷ்கண்ணா, அவைத்தலைவர் அரங்க நாகராஜன், பேரூராட்சி கவுன்சிலர் சுந்தர்ராஜன் மற்றும் சுந்தர்ராகவன் வார்டு செயலாளர்கள் பாஸ்கரன் வெள்ளைகிருஷ்ணன், வலசை கார்த்திக், கணேசன், நகர இணைச் செயலாளர் புலியம்மாள், ஒன்றிய துணைச் செயலாளர் சம்பத், மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள் ஜெயச்சந்திர மணியன், எம்.எஸ்.சுந்தரம், செந்தில்குமார், முடுவார்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம், வழக்கறிஞர் அணி ராஜ்குமார், வெள்ளைச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் ரேவதி, ஆறுமுகம், தொழிலதிபர் முத்துகிருஷ்ணன், கல்லணைமனோகரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

