மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ கோட்டைவாசல் காளியம்மன் கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டு சங்கங்கோட்டை கிராமத்தார்கள் சார்பாக அன்னதானம் நடைபெற்றது.

அம்மனுக்கு பால் தயிர் நெய் வெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சங்கங் கோட்டை கிராம சாவடி முன்பாக அறுசுவை அன்னதானம் நடைபெற்றது. இதில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு உணவு அருந்தி சென்றனர்.
தொடர்ந்து நேற்று இரவு சக்தி கரகம் எடுத்து வந்தனர்இன்று இரவு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற உள்ளது ஏற்பாடுகளை சங்கங்கோட்டை கிராமத்தினர் , சாமியாடிகள், தலைவர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சிவக்குமார், செயலாளர் சேகரன், பொருளாளர் சித்தன் ஆகியோர் செய்து வருகின்றனர்.