தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரம் மாநகரம் பெருங்களத்தூர் வடக்கு பகுதியில் திமுக சார்பில் இன்று சிறப்பு அன்னதான நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

பகுதி செயலாளரும் மண்டல குழுத் தலைவருமான காமராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த அன்னதான நிகழ்ச்சியில் 1000-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அதிகாலை முதலே பொதுமக்கள் வருகை தந்ததால் நிகழ்ச்சி உற்சாகமாக முன்னெடுக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா, தாம்பரம் மாநகர மேயர் வஸந்தகுமாரி, 5-வது மண்டல குழுத் தலைவர் இந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் நேரடியாக அன்னதானம் வழங்கினர்.
மேலும், தாம்பரம் பகுதி திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்று ஏற்பாடுகளை முழுமையாக செய்தனர். உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி சமூக நல நடவடிக்கையாக நடைபெற்ற இந்த அன்னதான நிகழ்ச்சி உள்ளூர் மக்களிடத்தில் பாராட்டைப் பெற்றது.








