• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

100 கிராமங்களில் அன்னதானம் நிகழ்ச்சி..,

ByP.Thangapandi

Jul 19, 2025

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொங்கபட்டி கிராமத்தில் அதிமுக முன்னாள் முதல்வரும் கழக பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமியின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு 100 கோவில்களில் வழிபாடு மற்றும் 100 கிராமங்களில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது.,

இதில் கொங்கபட்டியில் உள்ள விநயாகர், சந்தனமாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தனர்.பின்னர் கிராம பொதுமக்களுக்கு அன்னதானமும், இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களையும் முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயக்குமார் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் வழங்கினர்.

இதில் உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ வும் ஒன்றிய செயலாளருமான பா.நீதிபதி, உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ வும் கழக அமைப்பு செயலாளருமான ஐ.மகேந்திரன், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் துரைதனராஜ், உசிலம்பட்டி நகர செயலாளர் பூமாராஜா, மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் இளஞ்செழியன் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.,