வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகர திமுக அலுவலகத்தில் மாநகர செயலாளர் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன் எம்எல்ஏ அவர்கள் தலைமையில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திட மாவட்ட கழக அவைத் தலைவர் அண்ணன் திஅமுகமதுசகி, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் ஆகியோர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தி தியாகி கஸ்பா மாசிலாமணி அவர்களுக்கு வேஷ்டி அணிவித்து கௌரவப் படுத்தினார்கள்.
இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட கழக நிர்வாகிகள் மாநகர கழக நிர்வாகிகள் பகுதி கழக நிர்வாகிகள் வட்ட கழக நிர்வாகிகள் அணிகளின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
சுதந்திரத்திற்கு வித்திட்ட மாவட்டமான வேலூர் மாவட்டத்தை சேர்ந்த தியாகிகள் கௌரவித்து அவர்களிடம் தேவையான அனைத்தும் சலுகைகளும் தமிழக அரசின் மூலம் தங்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் என்று உறுதி மொழியும் வழங்கப்பட்டது.