மதுரையில் இருந்து துபாய் செல்ல வேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 13மணி நேரம் தாமதம் காரணமாக துபாய் செல்ல வேண்டிய 140 பயணிகள் விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
தாமதம் காரணமாக 36 பயணிகள் பயணத்தை ரத்து செய்தனர். துபாயிலிருந்து 181 பயணிகளுடன் இன்று காலை 11.10 மணியளவில் ஸ்பைஸ் ஜெட் விமானம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது.
பின்னர் மதுரையிலிருந்து துபாய்க்கு 176 பயணிகளுடன் பதல் 12.20 மணியளவில் புறப்படத்தயாரானது.
விமானத்தை தொழில்நுட்ப வல்லுநர்கள் சோதனை செய்த போது விமான சக்கரத்தில் உள்ள ஒரு டயரில் காற்று மிக குறைந்த அளவில் காணப்பட்டது. அதனை தொடர்ந்து எந்திரங்கள் மூலம் காற்று செலுத்தப்பட்டதில் காற்று நிரப்பப்படவில்லை. தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கு மேலாக தொழில்நுட்ப வல்லுநர்கள் சரி செய்ய போராடினர்.
இந்நிலையில் காற்று உள்ளே செல்லாததால் வேறு சக்கரம் மாற்ற ஏற்பாடு செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டு விமான நிலைய வளாகத்தில் காத்திருக்க வைக்கப்பட்டனர்.
விமானத்தின் தொழில்நுட்ப கோளாறு சரி செய்த பின் விமானம் புறப்பட தயாராகும் என ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவன ஊழியர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் விமான செயல்பாட்டு விதிகளின் படிஎட்டு மணி நேரத்திற்கு மேல் விமானிகள் தொடர்ந்து விமானத்தை ஓட்ட இயலாத சூழ்நிலையில் இன்று நள்ளிரவு ஒரு மணிக்கு பின் விமானிகள் விமானத்தை புறப்படலாம் என ஸ்பைஸ் ஜெட் நிர்வாகத்திடம் கூறினார். அதனைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து நள்ளிரவில் விமானம் மதுரையில் இருந்து புறப்பட்டு செல்லும் என ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
176 பள்ளிகளில் 36 பயணிகள் தங்கள் பயணத்தை ரத்து செய்ததால் தற்போது 140 பேர் மட்டும் துபாய் செல்ல தயார் நிலையில் உள்ளனர்.