• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கச்சத்தீவு திருவிழாவைப் புறக்கணிக்கும் மீனவர்கள்

Byவிஷா

Feb 22, 2024

தமிழக மீனவர்களைக் கைது செய்யும் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக கச்சத்தீவு திருவிழாவைப் புறக்கணிக்க மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே நடுக்கடலில் அமைந்துள்ள கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் அல்லது மார்ச் மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டின் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இந்த மாதம் நாளை (23) மற்றும் 24-ம் தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது.
இந்த திருவிழாவில் இந்திய தரப்பிலிருந்து 3 ஆயிரத்து 500 பக்தர்களும், இலங்கை தரப்பிலிருந்து 4 ஆயிரம் பக்தர்களும் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்பட்டது. இதனிடையே இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் தற்போது போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் மீனவர்களின் போராட்டம் காரணமாக கச்சத்தீவு திருவிழாவில் இந்த ஆண்டு இந்தியர்கள் யாரும் பங்கேற்கவில்லை என ராமேஸ்வரம் வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு தெரிவித்துள்ளார்.