விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை சுற்று வட்டார பகுதியில் 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. சிறிய ரக பட்டாசு ஆலைகளை தொடர்ந்து, தொழிலக பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து 15க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

சிறிய பட்டாசு ஆலைகளை மட்டும் குறி வைத்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி பட்டாசு உற்பத்தியினை முடக்குவதாக வெம்பக்கோட்டை தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கத்தினர் சிவகாசியில் உள்ள தொழிலக பாதுகாப்பு துறை அலுவலகத்தை நிர்வாகிகள் மாரீஸ்வரன், மணிகண்டன் ஆகியோர் தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பெரிய அளவில் இயங்கும் அலைகளில் ஆய்வு நடத்தாமல் சிறு பட்டாசு ஆலைகளை மட்டும் குறிவைத்து ஆய்வு நடத்துவதாக ஆய்வில் பாரபட்சம் காட்டுவதாக குற்றம் சாட்டி 100க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன. 300க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.