திண்டுக்கல், செட்டிநாயக்கன்பட்டி வண்டிப்பாதையைச் சேர்ந்த கர்ணன் மகன் கௌதம் (13). இவர் புறா பிடிப்பதற்காக தனது நண்பர் மோகன் (15) மற்றும் தம்பி அய்யா (10) ஆகியோருடன் அங்கம்மாள் நகர், வழித்துணை மாரியம்மன் கோயில் அருகே உள்ள பாலத்தின் அடியில் உள்ள 25 அடி தூண் மீது ஏறியுள்ளனர்.

அப்போது அய்யா மற்றும் மோகன் ஆகிய இரண்டு சிறுவர்களும் கீழே இறங்கிவிட்டனர் ஆனால், கௌதம் கீழே இறங்க முடியாமல் தவித்துள்ளார்.
இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் ஏணி மூலமாக சிறுவனை பாலத்தின் அடியில் இருந்த தூண் மீது இருந்து கீழே இறக்கினர்.
மேலும் தீயணைப்புத் துறையினர் சிறுவன் கௌதமை தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காவல்துறையினர் சிறுவனின் பெற்றோர்களை வரவழைத்து சிறுவனை அனுப்பி வைத்தனர்.