கோயம்புத்தூர் வடக்கு தீயணைப்பு நிலையத்தில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க நபரின் கைவிரலில் மோதிரம் ஒன்று சிக்கிக் கொண்டு விரல் வீங்கியும் எடுக்க முடியாமல் சிரமப்படுவதாகவும் உதவி கோரினார்

உடனடியாக நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் நிலையத்தில் மோதிரம் வெட்டும் உபகரணங்களை கொண்டு முயற்சி செய்து பார்த்ததில் மெட்டல் மிகக் கடினமானதாக இருந்ததால், வேறொரு முறை பயன்படுத்தப்பட்டு நரம்பு போன்ற நூல் சுற்றி சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி மெது மெதுவாக மோதிரத்தை எடுத்து விரலை பத்திரமாக மீட்டனர்.
இவ்வகையான மோதிரம் கழிவு மெட்டலால் உறுதியாகவும் விலை குறைவாகவும் கிடைப்பதால் இது போன்ற அபாயங்கள் ஏற்படுகின்றன.