மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஹார்விப்பட்டி சூறாவளிமேடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் அவரது மனைவி பாண்டியம்மாள் கறவை மாடு வளர்த்து பசும்பால் விற்பனை செய்து தொழில் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று பசு மாட்டை மேய்ச்சலுக்காக அவிழ்த்து விட்ட நிலையில் மாடு திடீரென அருகில் இருந்த கிணற்றில் விழுந்து சிக்கிக்கொண்டது. இதுகுறித்து திருப்பரங்குன்றம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த மதுரை திருப்பரங்குன்றம் நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் கயிறு மட்டும் கம்புகளின் உதவியுடன் பசுமாட்டை பத்திரமாக மீட்டனர். பத்திரமாக மாட்டை மீட்ட தீயணைப்புத் துறையினரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.





