புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியில் உள்ள குறுகிய சந்து ஒன்றில் ஓடு வேயப் பட்ட பழைய வீடு ஒன்றில் சரவணன் என்பவர் பினாயில் தயாரித்து அந்த வீட்டில் இருப்பு வைத்துக் கொண்டு வாகனங்களில் எடுத்துச் சென்று தெருத்தெருவாக வியாபாரம் செய்து வந்திருக்கிறார்.

இந்நிலையில் இன்று காலை நேரத்தில் யாரும் எதிர்பாராத விதமாக தீப்பிடித்து இருக்கிறது. இது குறித்து உடனடியாக அங்கிருந்தவர்கள் புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்து இருக்கிறார்கள். இரவு பகல் என எந்த நேரத்திலும் ஆயத்த நிலையில் இருக்கும் புதுக்கோட்டை தீயணைப்புத்துறை அதிகாரிகள் மாவட்ட உதவி அலுவலர் இம்மானுவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயணைப்பு வாகனத்தை எடுத்துச் சென்று எரிந்து கொண்டிருந்த வீட்டுக்கருகில் செல்ல முயன்ற போது அது குறுகிய பாதையாக இருந்ததால் உடனடியாக செல்ல முடியவில்லை. சாலையிலேயே வாகனத்தை நிறுத்தி விட்டு நீண்ட குழாய்கள் மூலம் தண்ணீரைக் கொண்டு சென்று பீச்சியடித்து தீயை அணைத்தனர்.




