• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கனிம வளம் எடுத்து சென்று குடிபோதையில் லாரிகளை ஓட்டிய ஓட்டுநர்களுக்கு அபராதம்… லாரிகள் பறிமுதல்…

அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக, கனிம வளம் எடுத்து சென்றது மட்டும் அல்ல குடிபோதையில் லாரிகளை ஓட்டிய எட்டு ஓட்டுநர்களுக்கு அபராதம் விதித்து
லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம்- நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறை – குடிபோதையில் அபாயகரமாக ஓட்டி வரப்பட்ட கனிம வள லாரி உட்பட அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் உயரத்தில் தொட்டி கட்டி இயக்கப்பட்ட (extra body) எட்டு கனிம வள லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் I.P.S., உத்தரவின் பேரில் நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் லலித்குமார் I.P.S., மேற்பார்வையில், இன்று 26.09.2024 ம் தேதி, நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறையினர் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது, வீயனூரைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவர் அபாயகரமாக (rash) குடிபோதையில் ஓட்டி வந்த கனிமவள லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், அதிக பாரம் ஏற்றுவதற்காக, அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் உயரத்தில் தொட்டி கட்டி (extra body) இயக்கப்பட்ட ஏழு காலி கனிம வள லாரிகள் தலா ரூ.1000 அபராதம் விதித்து பறிமுதல் செய்யப்பட்டன.