• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

‘அழகிய கண்ணே’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தனது ‘எஸ்தல் எண்டர்டெய்னர்’ நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் ‘அழகிய கண்ணே’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இந்தப் படத்தில் பட்டிமன்றம் புகழ் லியோனியின் வளர்ப்பு மகனான ‘லியோ’ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார் .இவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் பிரபு சாலமன் இருவரும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்கள்.

மேலும் சிங்கம் புலி, இயக்குநர் ராஜ்கபூர், காதல் சுகுமார், விஜய் டிவி ஆன்டிருவ்ஸ், அமுதவாணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுத, N.R.ரகுநந்தன் இசையமைக்கிறார். ‘காடன்’ திரைப்பட ஒளிப்பதிவாளர் A.R.அசோக் குமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். படத் தொகுப்பினை பிரபல படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மாணவரான சங்கத் தமிழன் மேற்கொள்கிறார். சண்டை இயக்கம் – ஸ்டண்ட் சில்வா.

இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் தம்பியும், அவரிடத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றியவருமான R.விஜயகுமார் இயக்குகிறார். பல திருப்பங்கள் கொண்ட ஒரு இளைஞனின் காதல் கதையை மையமாக கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது .