• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கண்ணாடிப் இழைபாலம் பராமரிப்பு பணி – ஆட்சியர் அழகு மீனா ஆய்வு

கன்னியாகுமரி கடலில் கண்ணாடிப் இழைபாலம் பராமரிப்பு பணியை ஆட்சியர் அழகு மீனா நேரில் ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை இடையே உள்ள கடல் பரப்பை இணைக்கும் கண்ணாடிப் இழை பாலத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த டிசம்பர் திங்கள் 31_ம் தேதி திறந்து வைத்தார்.

கன்னியாகுமரிக்கு இயற்கையின் வரப்பிரசாதமாக சூரியனின் உதயம், சூரிய அஸ்தமனம், மூன்று கடல் சந்திப்பு என்ற இயற்கையின் பரிசை கடந்து, கன்னியாகுமரி கடலில் உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் மூன்று நாட்கள் தவம் இருந்த நிகழ்வை, ஒரு வரலாற்று பதிலாக ராமகிருஷ்ணா மடத்தின் சார்பாக, விவேகானந்தர் நினைவு மண்டபம் குழுவின் தலைவர் ஏக்நாத் ரானடே தலைமையில் நடைபெற்ற மண்டப பணி நிறைவடைந்ததும். நினைவு மண்டபத்தை பார்வையிட இந்தியாவின் அனைத்து மாநிலங்களை சேர்ந்த பன்மொழி மக்கள், கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள். கடலில் படகில் பயணம் செய்த ஒரு புதிய அனுபவம் எல்லாம் குமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை, அந்த காலக்கட்டத்தை கடந்து, குமரி கடலில் வான் தொடும் உயரம் சிலை பணிகள் திட்டமிட்டு நடந்தாலும்.13_ஆண்டுகள் பல முறை தடைப்பட்டு, தொடர்ந்த ஐயன் திருவள்ளுவர் சிலையை புத்தாயிரம் அண்டு 2000_ஜனவரி1_ம் நாள் அன்றைய முதல்வர் மு. கருணாநிதி திறந்து வைத்தார்.

கலைஞர் கருணாநிதி திறந்து வைத்த உலக பொதுமறை தந்த திருவள்ளுவர் சிலை திறந்ததின் 25_வது ஆண்டின் நினைவாக, தமிழக அரசின் ரூ.38 கோடி நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்ட கண்ணாடிப் இழை பாலத்தை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த கண்ணாடிப் இழைப்பாலம் திறக்கப்பட்ட பாலம். பாலம் திறந்த 4_ங்கு மாதங்கள் கடந்த நிலையில், பாலத்தின் சில பராமரிப்பு பணிக்காக இன்று முதல் (ஏப்ரல் 17_22)வரை சுற்றுலா பயணிகள் கண்ணாடிப் பாலத்திற்கு, பணி நிமித்தம் தடை செய்யப்பட்டுள்ளனர்.

குமரி ஆட்சியர் அழகு மீனா இன்று கடல் கண்ணாடிப் இழை பாலத்தில் நடக்கும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

பள்ளி விடுமுறை மற்றும் புனித வெள்ளி, ஈஸ்டர் நிகழ்வு காரணமாக அரசு விடுமுறை என்பதால் வழக்கத்திற்கு மாறாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ள நேரத்தில், கண்ணாடிப் பாலத்திற்கு குறிபிட்ட பொது விடுமுறை நாளில் சுற்றுலா பயணிகள் அனுமதி இல்லை என்பது அனைத்து மொழி, நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.