• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சங்கரநாராயணசாமி கோவிலில் திருவிழா..,

ByV. Ramachandran

Aug 1, 2025

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் மிகவும் புகழ் பெற்ற சிவ ஸ்தலங்களில் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஆடித்தவசு திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும்.

விழா நாட்களில் சுவாமி, அம்பாள் தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். . இந்த ஆண்டுக்கான ஆடித்தவசு திருவிழா கோமதி அம்மன் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் 4. மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றது. கொடியேற்ற விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆடித்தவசு திருவிழா 11 ம் திருநாளான ஆகஸ்ட் 7ஆம் தேதி வியாழக்கிழமை அன்று நடைபெற்ற து விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகபடிதாரர்கள் செய்து வருகின்றனர். ஒன்னு இரண்டு மூன்றாம் திருவிழாக்களில் அம்மன் பல அவதாரங்களில் பக்தர்களை காட்சியாக அருள்பாளித்தார். நேற்று வராகி அம்மனாக காட்சியளித்தார். பின் அம்மன் நகர் வலம் வந்து பொதுமக்களுக்கு காட்சியளித்தார்.