• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

மாணவிகளுக்கு பேராசிரியர் மூலம் பாலியல் தொல்லை!!

ByM.I.MOHAMMED FAROOK

Sep 24, 2025

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் காரைக்கால் கிளையில் பயிலும் மாணவி ஒருவர் அழுதபடியே பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது. அதில் துறை சார்ந்த பேராசிரியர் ஒருவர் அடிக்கடி ஆபாசமாக பேசுவதாகவும் whatsapp மூலம் ஆபாச படங்களை அனுப்ப சொல்லுவதாகவும் மாணவி உடையில்லாமல் படம் எடுத்து அனுப்ப சொல்வதாகவும் கூறி அழுகிறார்.

அனுப்பவில்லை என்றால் இன்டெர்னல் மதிப்பெண்ணை மதிப்பெண் போட மாட்டேன் என அவர் மிரட்டுவதாகவும் அந்த ஆடியோவில் கூறப்பட்டுள்ளது.பெற்றோருக்கு தெரிந்தால் படிப்பை நிறுத்தி விடுவார்கள் அச்சத்தில் மாணவி நடுங்கும் குரலில் பேசுகிறார்.கேரளா மாணவிகளை குறிவைத்து அவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாகவும் பல மாணவிகள் இவரால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.இந்த மாணவி சம்பவம் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.

குறிப்பு… மாணவி பேசும் ஆடியோ உள்ளது

இந்நிலையில் இது தொடர்பாக காரைக்காலில் சேர்ந்த புதுச்சேரி முன்னாள் கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் ஒரு புகார் ஆடியோ வெளியிட்டுள்ளார். அதில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் காரைக்கால் கிளையில் பயிலும் முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவிகளுக்கு பேராசிரியர்கள் மூலம் பாலியல் தொல்லை சமீபகாலமாக நடத்தப்படுவதாக புகார் கூறியுள்ளார் . இந்த ஆடியோவையே புகாராக எடுத்துக்கொண்டு காவல்துறையும் பல்கலைக்கழக அதிகாரிகளும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று கமலக்கண்ணன் வலியுறுத்தியுள்ளார் ..
ஆடியோ…
கமலக்கண்ணன், முன்னாள் கல்வி அமைச்சர்

மாணவி பேசும் ஆடியோவும் தற்போது கமலக்கண்ணன் வெளியிட்டுள்ள ஆடியோவும் இரண்டும் காரைக்கால் புதுச்சேரியில் சமூகவலைத் தலங்களில் வெளிவந்து பெரும் அதிர்ச்சியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.