• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வாகனம் மோதி பெண் சிறுத்தை உயிரிழப்பு

Byராஜீ

Jan 3, 2022

பண்ணாரி – திம்பம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் சிறுத்தை இறப்பு.

நேற்று 02.01.2022ஆம் தேதி மாலை சுமார் 6.25 மணியளவில் சத்தியமங்கலம் வனச்சரகம், பண்ணாரி பிரிவு, வடவள்ளி காவல் சுற்று, செருப்பு தூக்கி பள்ளம் சராகம், விநாயகர்கோவில் அருகில் பண்ணாரி – திம்பம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை ஒன்று இறந்துள்ளதாக சத்தியமங்கலம் வனச்சரக அலுவலர் எஸ்.பெர்னாடுக்கு தகவல் கிடத்து சம்பவயிடத்திற்கு வனப்பணியாளர்களுடன் விரைந்து சென்று தணிக்கை செய்தபோது பெண் சிறுத்தை ஒன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.