

சிந்தனைத்துளிகள்
1. நன்றாக எழுதுவதைப் போன்றது சத்தியம். அது பழக பழகத்தான் சரியாக வரும்.
2. வேலை செய்யாவிட்டால் நாட்களும் புனிதமாகாது, வாழ்க்கையும் புனிதமாகாது.
3. வளமுடன் வாழும்போது நண்பர்கள் உன்னை அறிவர். வறுமையில் நீ நண்பர்களை அறிவாய்.
4. திறமை என்பது அனுபவம், அறிவு, ஆர்வம் ஆகிய மூன்று சக்திகளின் வெளிப்பாடே.
5. உண்மையான பெரிய மனிதனுக்கு முதல் அடையாளம் பணிவு.
