• Sun. Mar 16th, 2025

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Jun 17, 2023

சிந்தனைத்துளிகள்

எந்த பிரச்சனைக்கும் தீர்வு உண்டு:

ஒரு கோடை காலம், கொளுத்தும் வெயில் மக்களையும், பறவைகளையும் வாட்டி வதைத்தது. தாகம் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஏற்பட்டது. அனைத்து பறவைகளும் தங்கள் தாகத்தைத் தீர்க்க தண்ணீர் இன்றி அலைந்து திரிந்தது. அவற்றில் ஒரு புத்திசாலி காகமும் இருந்தது. அது தண்ணீருக்காக அலையும் போது ஒரு வீட்டின் முற்றத்தில் வாய் குறுகிய குடுவை பாத்திரம் ஒன்றைக் கண்டது.
அங்கே சென்றபோது அப்பாத்திரத்தில் சிறுது தண்ணிர் இருந்ததைக் கண்டு மகிழ்ந்தது. உடனே குடுவையின் விளிம்பில் அமர்ந்து, தன் அலகால் தண்ணீரைக் குடிக்க முயன்றது. ஆனால் அதன் அலகிற்கு தண்ணீர் மட்டத்தை எட்ட முடியவில்லை. இதைவிட்டால் வேறு இடத்தில் தண்ணீர் கிடைக்காது என எண்ணி அதனை எப்படியாவது குடிக்க வேண்டுமென சுற்றுமுற்றும் பார்த்து யோசனையில் ஈடுபட்டது.
பக்கத்தில் சிறு சிறு கூழாங்கற்கள் கொட்டிக் கிடந்ததை எடுத்து அந்தக் குடுவையில் போட்டது. கூழாங்கற்கள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க தண்ணீரின் நீர் மட்டம் உயரத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் குடுவையின் வாயருகே தண்ணீர் வந்தது. உடனே அந்தக் காகம் தண்ணீரில் தன் அலகை வைத்து தாகம் தீர தண்ணீர் அருந்தி மகிழ்ந்தது.

கதையின் நீதி: எந்தப் பிரச்னைக்கும் ஒரு தீர்வு உண்டு. நமது புத்தியை பயன்படுத்தி தீர்வு கண்டால் பிரச்னை தீர்ந்து மகிழ்ச்சி ஏற்படுவது உறுதி.