• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

குடும்பத் தகராறில் மாமனாரை அடித்து கொலை..,

ByVasanth Siddharthan

Apr 9, 2025

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கோதமங்கலத்தை சேர்ந்தவர் செல்வம் 55 , இவருக்கு இரண்டு மகன் ,ஒரு மகள் உள்ளனர். டைல்ஸ் ஒட்டும் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள் ஸ்ரீதேவி கணவரான அன்பரசன் (37) செண்டரிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மாமனார் செல்வம் மற்றும் மருமகன் அன்பரசன் அடியே தகராறு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் ஒருவர் ஒருவர் அடித்துக் கொண்டுள்ளனர்.

இதில் மருமகன் அன்பரசன் தாக்கியதில் படுகாயம் அடைந்த செல்வத்தை உறவினர்கள் மூலமாக பழனி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் குடும்பத் தகராறில் மாமனார் மருமகன் இடையே சண்டையில் மாமனார் செல்வத்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து அன்பரசனை தேடி வந்த நிலையில் இன்று அதிகாலை அன்பரசனை கைது செய்துள்ளனர். பழனி அருகே மாமனார் மருமகன் இடையே ஏற்பட்ட தகராறில் மாமனாரை மருமகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.