குமரிமாவட்டத்தில் மலை சூழ்ந்த தென்னை மரங்கள் தாலாட்டும்
பச்சை பசேல் வயல்கள் சூழ ஆவினங்களில் நடை ஓசை ஒலிக்கும் சிறிய
ராஜாவூர் கிராமத்தின் முதல் குருவானவர்.

கோட்டார் மறைமாவட்டத்தில் தொடங்கிய அவரது இறையியல் பணி,குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்கள் என பயணித்து. முதுமை
காரணமாக குருத்துவ பணியிலிருந்து ஓய்வு பெற்ற தந்தை கார்மல் அகவை 102 உலகவாழ்வில் இருந்து ஒய்வு பெற்ற தந்தை கார்மலுக்கு குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ சமுகம் மட்டுமே அல்ல. மானிடத்தை நேசிக்கும் அனைவருமே. கண்களில் நீர் முத்துக்கள் திரையிட பிரியா விடை கொடுத்தாகள்..

விடை பெறுகிறேன். பிரண்ட் நல்லாயிருக்கீங்களா?நல்லாயிருப்பீங்க!நல்லாயிருக்கனும் பிரண்ட். என்னுடைய இறையழைத்தலுக்கு வீட்டில்
சிறுது தயக்கம் காட்டிய போதும் நான் உன்னை தேர்ந்து கொள்வேன்… அஞ்சாதே நான் உன்னோடு என்ற இறைவனின் உடனிருப்பை உணர்ந்தேன்.இறைவனால் அனுப்ப படுகையில் அவரது கரம் உடனிருந்து வழிநடத்தும் என்ற ஆழமான நம்பிக்கை தான் என்னை குருத்துவ நிலைக்கு உயர்த்தி சென்றது.




