கரூரில் மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் உட்பட அனைத்து நிர்வாகிகளும் தொழுகை செய்து இப்தார் நோன்பை வரவேற்றனர். பேனர் கட்சி கொடி இன்றி நோன்பு திறப்பு நிகழ்வு நடைபெற்றது.
ஈகைப் பண்பையும் நல்லிணக்கத்தையும் போற்றும் புனித ரமலான் நோன்பு இஸ்லாமியப் பெருமக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் விஜய் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் நோன்பு திறப்பு நிகழ்வு நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கரூர் ஜவகர் பஜார் பகுதியில் அமைந்துள்ள தனியார் மஹாலில் தமிழக வெற்றி கழகம் மேற்கு மாவட்டத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக வெற்றி கழகம் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமையில், விஜய் கலந்து கொண்டதைப் போல வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி அணிந்து அனைவரும் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் 150-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து மேற்கு மாவட்ட தலைவர் மதியழகன் மற்றும் உடன் வந்த நிர்வாகிகள் இஸ்லாமிய சகோதரர்களின் வேண்டுகோளை ஏற்று தொழுகை செய்து நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் நோன்பு கஞ்சி, ரூட்ஸ், சமோசா, குளிர்பானம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நோன்பு முடிந்து சென்ற அனைத்து இஸ்லாமியர்களுக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.
குறிப்பாக கரூர் மாநகர் பகுதியில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வில் கட்சி பேனர் கொடிகள் எதுவும் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.