காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் டாஸ்மாக்கை அகற்றும் வரை உண்ணாவிரதம் போராட்டத்தை தொடங்கினார்.
மக்களை பெரிதும் பாதிக்கும் கோழிவிளை சந்திப்பில் உள்ள டாஸ்மாக் கடை எண் (4823) – மற்றும் பார் ஆகியவற்றை உடனடியாக மூட கேட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் தொடர் உண்ணாவிரத போராட்டம். தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் தொடங்கினார்.

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் மிக முக்கிய நகரமான களியக்காவிளை - கோழிவிளை - செங்கவிளை - திருவனந்தபுரம் செல்லும் நான்குவழி சாலையில் கோழிவிளை சந்திப்பில் டாஸ்மாக் கடை எண் 4823 - என்ற எண்ணுடைய டாஸ்மாக் கடை மற்றும் பார் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியானது மிகவும் நெருக்கடியான போக்குவரத்தும் பொதுமக்களும் அதகமாக பயன்படுத்த கூடிய இடமாகும். இந்த பகுதியில் 30 -மீட்டர் தூரத்தில் மருத்துவமனையும், இஸ்லாமிய பள்ளி வாசலும், கிறிஸ்தவ ஆலயமும் மற்றும் இந்து கோவிலும் மற்றும் அரசு நடுநிலை பள்ளி, தனியார் KIDS பள்ளியும் உள்ளது. இந்த மதுக்கடையில் உள்ள பாரில் கடந்த 31-12-2023 ஞாயிற்றுக்கிழமை பாரில் ஏற்பட்ட தகராறில் ஒரு மருத்துவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதனால் இப்பகுதியில் மிகப்பெரிய சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டது. தொடர்ந்து அனைத்து கட்சியினர் சார்பாக பலமுறை மதுக்கடை அகற்ற போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இறுதியாக கடந்த 09-03-2024 அன்று பொதுமக்கள் சார்பில் பூட்டு போடும் போராட்டம் நடைபெற்றது. அப்போது டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் இந்த மதுக்கடை ஒரு மாதத்தில் மூடுவதாக உத்தரவாதம் அளித்தார்கள் ஆனாலும் மதுக்கடையை மூட எந்த நடவடிக்கையும் எடுக்காதகாரணத்தால் மீண்டும் இப்பகுதி மக்களோடு இணைந்து கடந்த 29-07-2024 திங்கட்கிழமை முதல் கோழிவிளை சந்திப்பில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாபெரும் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அப்போது மாவட்ட துணை ஆட்சியரும், மாவட்ட டாஸ்மாக் மேலாளருமான சங்கரலிங்கம் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்து எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மேற்கண்ட டாஸ்மாக் கடையை ஒரு மாதத்திற்குள் மூடிவிடுவோம் என்று எழுத்து பூர்வமாக கடிதம் வழங்கப்பட்டது. ஆனாலும் இதுவரையும் இந்த டாஸ்மாக் கடையை மூடவில்லை. ஆகவே உடனடியாக இந்த டாஸ்மாக் கடை மற்றும் பாரை மூட கேட்டு கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பினுலால் சிங் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தை தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. கட்சியின் பல்வேறு பொருப்பாளர்களுடன் அமர்ந்து இன்று காலை(நவம்பர்_20) தொடங்கினார். வட்டார நகர தலைவர்கள் விஜயகுமார், ராஜசேகரன், என்.ஏ. குமார், ரெகுபதி, ரவிசங்கர், ஹனுக்குமார் மாநில பொதுக்குழு உறுப்பினர் பால்ராஜ், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் திபாகர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.


காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தால் குறுகிய சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.