• Sun. Jan 25th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

விவசாயிகள் அணி தலைவர் கே.ஆர் வேதநாயகம் வேண்டுகோள்..,

ByT. Balasubramaniyam

Jan 24, 2026

தமிழக விவசாய பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி மற்றும் அவர்களைச் சார்ந்தவர் களையும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர் இதனை வன்மையாக தமிழ் மாநில காங்கிரஸ்,அரியலூர் மாவட்ட விவசாயி பிரிவு மற்றும் விவசாயி கள் கண்டிக்கின்றோம். தமிழ்நாட்டில் கஞ்சா வியாபாரி களும் கள்ளச்சாராய வியாபாரி களும் மணல் கொள்ளைக்காரர்கள் கனிம வளங்களை திருடுபவர் களும் சுதந்திரமாக நடமாடும் தமிழ்நாட்டில் விவசாயிகளுக்காக தொடர்ந்து போராடி வரும் விவசாய சங்க தலைவர்கள் விவசாயி களுக்காக தொடர்ந்து போராடி வருகின்றனர் அவர்களை கைது செய்து இருப்பது வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஒரு போராட்ட காலங்களில் சங்க தலைவர்களும் தொண்டர்களும் போராடுவது இயல்பான ஒன்று கறிக்கோழி உற்பத்தி செய்யும் விவசாயிகள் தங்களுக்கு கட்டுபடியான விலை நிர்ணயம் வேண்டும் என்று சங்கத்தின் மூலமாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் அதன் ஒரு பகுதியாக கறிக்கோழி குஞ்சுகளை விடுவதில்லை என்றும் அதை தடுப்பது என்றும் போராட்ட காலத்தில் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது இது போராட்ட காலங்களில் இயல்பான ஒன்று இதை செய்ததற்காக தமிழக அரசும் தமிழக காவல்துறையும் அவர்களை கைது செய்து வழக்குப்பதிவு செய்து இருக்கிறது. இது மிகவும் ஒரு மோசமான செயலாகும் போராட்டக் காலங் களில் நடைபெறும். ஒரு செயலின் மீது இவ்வாறான நடவடிக்கை என்பது சுதந்திரத் திற்கும் போராட்டத் திற்கும் விடக்கூடிய அச்சுறுத்தலாகும். இதிலேயே வன்முறை துளியும் இன்றி அவர்கள் கறி கோழி குஞ்சுகள் விவசாயிகளின் தோட்டத்திற்கு வருவதை மட்டுமே தடுத்து இருக்கிறார் என்றும் முதலாளி களின் கைக்கூலியாக செயல்பட்டு காவல்துறை வழக்குப்பதிவு செய்து இருக்கிறது தமிழக விவசாயிகளினுடைய ஒரே முதன்மையான பண்டிகையான பொங்கல் பண்டிகை அன்று கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டிருக்கின்றனர் . தமிழக அரசுக்கு இதன் மூலம் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகி ன்றேன் இந்த தாக்குதல் என்பது விவசாய சங்க தலைவர்கள் மீது தாக்கப்பட்ட தாக்குதல் அல்ல ஒட்டுமொத்த தமிழக விவசாயிகள் மீது தமிழக அரசு காவல் துறையின் மூலம் தாக்கப்பட்ட தாக்குதல் செய்திருப்பதாக கருதுகிறேன் இந்த செயலை வன்மையாக கண்டிக்கின்றோம் போராட்டக் காலங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு நடைமுறை இருக்கின்றது இப்பொழுது ஈசன் முருகசாமி அவர்களையும் அவரைச் சார்ந்தவர்களையும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

சமீப காலங்களில் இருந்து தமிழக அரசின் உடைய நடவடிக்கை விவசாயிகளுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கிறது. ஒரு மாதத்திற்கு முன்பு இன்னொரு விவசாய சங்க தலைவர் பாண்டியன் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். அவருக்கு போடப்பட்ட வழக்குக்காக 13 ஆண்டுகள் என்று கூறி ஆறு ஆண்டுகள் மூன்று ஆண்டுகள் நான் தான் நான்காண்டுகள் என்று போடப்பட்ட வழக்குகளின் மொத்தம் 13 ஆண்டுகள் சிறை என்றார்கள் தமிழக வரலாற்றில் தமிழக விவசாய சங்கத் தலைவர்கள் கைது செய்யும் நடவடிக்கை தற்போது தான் அரங்கேற்றி உள்ளது திராவிட மாடல் அரசு இன்னும் மூன்று மாதத்தில் தேர்தல் வரும்போது நிச்சயமாக விவசாயிகளும் பொதுமக்களும் தக்க பாடம் புகட்டுவார்கள். தமிழக அரசு உடனடியாக விவசாய சங்க தலைவர்களை விடுதலை செய்து வழக்குகளில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் வருங்காலங்களில் இது போன்று விவசாயிகளின் உரிமைக்காக போராடும் தலைவர்களை கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது ,

எனவே நியாயமான காரணத்திற்காக போராடிய ஈசன் முருகசாமி மீது தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற்று அவரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசிடம் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.