• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

500 டன் வெங்காயம் தேக்கம் விவசாயிகள் !!!

BySeenu

Jun 8, 2025

கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மார்ச் மாதத்தில் அறுவடை செய்யப்பட்ட சுமார் 500 டன் சின்ன வெங்காயத்தை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதத்தில் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் நடவு செய்யப்பட்டது. இதனை மார்ச் மாதத்தில் அறுவடை செய்தனர் இந்நிலையில் வெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்காததால் அறுவடை செய்த வெங்காயத்தை பட்டவையில் அடைத்து வைத்து இருந்தனர்.

இங்கு வெங்காயம் வாங்க வரும் மொத்த வியாபாரிகள் அடிமட்ட விலைக்கு கேட்டு வருகின்றனர். தற்பொழுது பருவ மழைக்காக மீண்டும் சின்ன வெங்காயம் நடவு செய்யும் பணி நடந்து வருகிறது. முன்பு அறுவடை செய்த சின்ன வெங்காயமே இன்னும் விற்பனை செய்ய முடியாமல் இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர்.