நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி தண்டாளம் கிராமத்தில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவர் தனது நிலத்தை சோலார் பேணல் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனத்திடம் விற்றுள்ளார்.

அந்த தனியார் நிறுவனம் சுமார் 55 ஏக்கர் விவசாய நிலத்தில் சோலார் ப்ளாண்ட் அமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாய நிலம், வடிகால் வாய்க்கால்களை ஆக்கிரமித்து இந்த ப்ளாண்ட் அமைய உள்ளதால் மற்ற விவசாய நிலத்தில் விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.
விவசாயிகளின் தலையில் சோலார் நிறுவனம் இடியை போட்டுவிட்டதை குறிக்கும் வகையில் தலையின் புகார் மனுவை வைத்து மறைத்தபடி நூதனமான முறையில் ஆட்சியர் ஆகாஷிடம் புகார் மனு அளித்தனர். இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும் போது அந்த சோலார் ப்ளாண்டம் அமையும் சுற்றி உள்ள நிலங்களில் இனிவரும் காலங்களில் விவசாய செய்ய முடியாதபடி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், பாசன வாயக்கால்களை அடைத்து விட்டதாகவும் புகார் தெரிவித்த அவர்கள் உடனியாக அப்பகுதியில் சோலார் ப்ளாண்ட் அமைப்பதை மாவட்ட நிர்வாகம் தடுத்து விவசாயிகளின் வாழ்வாதரத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்