• Sat. May 4th, 2024

விவசாயிகளின் உண்ணாவிரத போராட்டம் – ஆர்.பி.உதயக்குமார்.,

ByP.Thangapandi

Dec 1, 2023

நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து கொண்டிருக்கிறது, தண்ணீர் குறைந்துவிட்டது என மக்களை ஏமாற்றுவது ஏன் – கடலில் கலக்கும் நீரை இந்த மக்களுக்கு வழங்காமல் புறக்கணிப்பது ஏன் – என உசிலம்பட்டியில் ஆர்.பி.உதயக்குமார் கேள்வி..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஆர்.பி.உதயக்குமார்.,

58 கால்வாய் என்பது வெறும் வார்த்தை அல்ல இந்த மண்ணின் மைந்தர்களுடைய வாழ்வாதார பிரச்சனை, உயிரிலே கலந்து உணர்விலே கலந்து வாழ்வாதரத்தை நிலை நிறுத்தி காட்டுகின்ற இந்த வாழ்வாதார பிரச்சனையை மெத்தன போக்கோடு செயல்படுகிற ஆளுகிற திமுக அரசின் பாராமுகமாக இருப்பதன் காரணம் தான் என்ன என்று இன்று கண்ணீரோடும், கவலையோடும் அறவழியில் போராடி வருகின்றனர்.

உசிலம்பட்டி மக்களின் போராட்டம் என்றால் எப்படி இருக்கும் என்பது அரசாங்கத்திற்கு தெரியும் ஆனால் அறவழியிலே, ஜனநாயக முறையில் இந்த அரசுக்கு கவணத்திற்கு கொண்டு வருகிற இந்த போராட்டத்தில் கட்சிகள் கடந்து, சமுதாயம் கடந்து, சங்கங்கள் கடந்து அனைவரும் இங்கு திரண்டிருக்கிறார்கள்.

அவர்களோடு இணைந்து பதிவு செய்வதற்கும், கோரிக்கை வைப்பதற்கும் அதிமுகவின் கருத்தையும் பதிவு செய்ய வாய்ப்பு கொடுத்த விவசாய சங்கங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வைகை அணையின் உசிலம்பட்டி 58 கால்வாயின் மதகை 67 அடியில் வைத்த போது அதிகாரிகள் கூட நம்பவில்லை ஆனால் அதிமுக அரசு தான் இந்த திட்டத்தை நிறைவேற்றி 5 முறை தண்ணீரை திறந்து வைத்தது.

இந்த அரசுக்கு மனமும், இந்த மக்கள் மீது அக்கறை இருந்தால், வைகை அணையின் நீர்மட்டம் 67, 68 அடி இருக்கிற போது கூட வைகை அணையிலிருந்து 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது, ஆகவே விவசாயிகளின் கண்ணீரை துடைப்பதற்காக தண்ணீரை திறக்க வேண்டும், இன்றைக்கு வேண்டுமானால் உப்புக்கு சப்பாக அதிகாரிகள், மாவட்ட ஆட்சி தலைவர் நியாயப்படுத்தலாம், தண்ணீர் இன்னும் வந்து கொண்டிருக்கிறது, உங்களுக்கு எச்சரிக்கையாகவே சொல்கிறோம் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவ மழை பெய்யும், நான் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சராக பணியாற்றியுள்ள காரணத்தினால் இந்த வடகிழக்கு பருவ மழையில் இப்போது கூட புயல் உச்சம் கொண்டிருக்கிறது, இன்று சென்னை தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

தண்ணீர் கரை புரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது, வைகை அணையின் தண்ணிரைக் கூட கடலில் கலக்க திறந்து விடுகிற அரசாங்கம் ஏன் 58 கால்வாயை புறக்கணிக்கிறீர்கள், திருமங்கலம் பிரதான கால்வாயை புறக்கணிக்கிறீர்கள், மேலூர் கால்வாயை புறக்கணிக்கிறீர்கள் இதில் ஏதேனும் அரசியல் மனமாட்சியம் இருக்கிறதா அல்லது எதிர்கட்சியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி என்பதால் உங்களுக்கு மனம் இறங்க வில்லையா, இந்த மக்கள் மீது உங்களுக்கு அக்கறை இருக்கிறதா, அக்கறை இல்லையா என தெரியவில்லை.

நிச்சயமாக உறுதியாக தண்ணீர் இருந்தது, உங்களுக்கு திமுக அரசுக்கு முதலமைச்சருக்கு நிச்சயமாக மனம் இருந்திருந்தால் 58 கால்வாயிலே தண்ணீர் வந்திருக்கும் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும், உங்களுக்கு மனமில்லை, இங்கே தண்ணீர் இல்லை, ஆனால் விவசாயிகள் கண்ணீரை பார்த்து கொண்டிருக்கிறீர்கள் இது வெறும் டிரைலர் தான் விவசாயிகள் அனைத்து அமைப்புகளும் ஒன்று சேர்ந்து இன்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.,

தண்ணீரை திறந்து விடுங்கள், இல்லையென்று சொன்னால் உசிலம்பட்டியிலே ஒரு போராட்டம் வெடிக்கும் என்று சொன்னால் அதை அரசு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமே எதிர்கொள்ள முடியாமல் நடுநடுங்கி போனது என்பதை மறந்துவிடக் கூடாது.

உங்களது உரிமை பெரிதா, உங்கள் உயிர் பெரிதா என இந்த பகுதி மக்களிடம் கேட்டால் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே எங்களுக்கு உயிர் பெரிதல்ல, உரிமை தான் பெரிது என்ற பதில்தான் வரும்.

சம்பிரதாயத்திற்காக நடைபெறுகிற போராட்டம் என நினைத்துவிடாதீர்கள், உடனடியாக கவனத்தில் எடுத்து கொண்டு, அதிகாரிகளை அழைத்து ஆய்வை நடத்துங்கள்.,

இது மக்களின் வாழ்வாதார பிரச்சனை நமக்கு வாக்களித்து நம்மை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள், இவர்களுக்கு சேவை செய்வது நமது கடமை, இவர்கள் கேட்கும் கோரிக்கையை நிறைவேற்றுவது நமது தார்மீக கடமை அந்த தார்மீக கடமையை செய்ய மறுக்கும் எந்த அரசாக இருந்தாலும் அது தூக்கி எரியப்படும் என்பது தான் கடந்த கால வரலாறு. இன்று விவசாயிகள் ஒன்றிணைந்து இருக்கிறார்கள் மிக விரைவில் வர்த்தக சங்கத்தினரும், வியாபார பெருமக்களும் ஒன்றிணைய உள்ளதாக நம்பப்படுகிறது.

இந்த பகுதி விவசாய சங்கங்கள் எந்த போராட்டத்தை முன்னெடுத்தாலும் அனைத்து கட்சிகளும் உங்களோடு இருந்தாலும் அதிமுக உறுதுணையாக முதன்மையாக உங்களோடு இருக்கும் என எடப்பாடி பழனிச்சாமி உறுதி அளித்துள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

வெற்றி கிட்டும் வரை இந்த போராட்டம் வெல்லட்டும், இன்னும் தண்ணீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து கொண்டிருக்கிறது, ஆகவே செயற்கையாக தண்ணீர் குறைந்துவிட்டது என மக்களை ஏமாற்ற வேண்டாம், நீர் பிடிப்பு பகுதியில் பெறுகிற அந்த மழை பொழிவை மக்களின் கண்ணீரை துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.

மேலும், உசிலம்பட்டி 58 கால்வாயில் நிரந்தரமாக தண்ணீர் திறக்க நிரந்தர அரசானை பெற்றுத் தர சட்டமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் என விவசாயிகள் சார்பில் ஆர்.பி.உதயக்குமாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது., அதற்கு ஏற்கனவே கோரிக்கை உள்ளது, சிறப்பு கவண ஈர்ப்பு தீர்மானமாக கொண்டு வந்து தீர்வு காண்போம் என தெரிவித்து சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *