திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு சுற்றுப்புற பகுதியை அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது தற்போது வரத்து அதிக காரணமாக தக்காளி விலை குறைந்து காணப்படுகிறது.
விவசாயிகளிடமிருந்து மொத்த வியாபாரிகள் நான்கு ரூபாய்க்கு தக்காளி கொள்முதல் செய்கின்றனர்.

மொத்த வியாபாரிகள் 15 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டிகளை ரூ.60 முதல் ரூ.150 வரை மார்க்கெட் வியாபாரிகள் வாங்கிய செல்கின்றனர்.
தரத்திற்கு ஏற்றவாறு 1 கிலோ எடை கொண்ட தக்காளி பொதுமக்களுக்கு ரூபாய் 10 முதல் ரூபாய் 20 வரை விற்பனையாகிறது
இதனிடையே உள்ளுர் தக்காளியை தொடர்ந்து ஆந்திராவில் இருந்தும் தக்காளி இறக்குமதி செய்யப்படுகிறது இதனால் வத்தலக்குண்டு தினசரி மார்க்கெட்டில் தக்காளி வரத்து அதிகரித்து காணப்படுகிறது
இறக்குமதி செய்யப்பட்ட தக்காளிகள் விற்பனை ஆகாமல் சேதமடைகின்றன இதனால் நாள்தோறும் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது
தற்போது சேதமடைந்த தக்காளிகளை விவசாயிகளும், வியாபாரிகளும் பெட்டி பெட்டியாக எடுத்து சென்று சாலைகளில் கொட்டி வருகின்றனர்.
கஷ்டப்பட்டு விளைவிக்கப்பட்ட தக்காளிகள் விற்பனையாகாமல் சாலையில் கொட்டப்படும் காட்சி வேதனையை அளிப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.