வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன் கிருதுமால் நதி ஆயக்கட்டை முழுமையாக நிறைவேற்றி தரவில்லை என்றால் வரக்கூடிய 2026 சட்டமன்ற தேர்தலை 46 கண்மாய் விவசாயிகளும் புறக்கணிப்பு – விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே வீரசோழன் கிராமத்தில் நடைபெற்ற வைகை கிருதுமால் நதி விவசாய சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியது.
சங்கத் தலைவர் பஷீர் அகமது பேட்டி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே வீரசோழன் கிராமத்தில் வைகை கிருதுமால் நதி விவசாய சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் வைகை கிருதுமால் நதி விவசாய சங்க தலைவர் பசீர் அகமது தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காவேரிங வைகை கிருதுமால் குண்டாறு இணைப்பு திட்டத்தை தொடர்ந்து கோதாவரி நதியை காவேரியோடு இணைப்பு சம்பந்தமாக ஆலோசனை நடத்தப்பட்டது.
மேலும் இந்த கூட்டத்தில் கிருதுமால் நதியில் உள்ள முள் செடிகளை கடைநிலை பகுதி வரை உடனடியாக அகற்ற வேண்டும், கிருதுமால் நதியில் உள்ள சட்டர்களை பழுது நீக்க வேண்டும், அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நிலங்களை சிப்காட் பயன்பாட்டிற்காக கையகப்படுத்த கூடாது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் வீரசோழன் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்திற்கு பின் பேட்டி அளித்த வைகை கிருதுமால் நதி விவசாய சங்க தலைவர் பசீர் அகமது,

கிருதுமால் நதி பாசன விவசாயிகள் 30 ஆண்டுகளாக போராடி இந்த பகுதி கிட்டத்தட்ட முழுமையாக புறக்கணிக்கப்பட்டு விட்டது என அனைத்து விவசாயிகளும் கருத வேண்டிய சூழல் உள்ளது. வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்
கிருதுமால் நதி ஆயக்கட்டை முழுமையாக நிறைவேற்றி தரவில்லை என்றால் வரக்கூடிய 2026 சட்டமன்ற தேர்தலை 46 கண்மாய் விவசாயிகளும் புறக்கணிப்பதாக இந்த கூட்டத்தில் ஏக மனதாக இந்த நிர்வாக செயற்குழு தீர்மானிக்கிறது. 2021 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட காவேரி வைகை கிருதுமால் இணைப்பு திட்டம் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. வெகு விரைவில் இந்த திட்டத்தை நிறைவு செய்ய வேண்டும் என பேசினார்.