விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முத்தாண்டியாபுரம் ,செவல்பட்டி, நதிக்குடி, எதிர்கோட்டை, ,டி. கான்சாபுரம், பூசாரிப்பட்டி, அப்பாயநாயக்கர்பட்டி, புல்லக்கவுண்டன்பட்டி, ஆகிய கிராமங்களில் கேந்தி பூ அதிக அளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கிணற்று பாசனத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் வரை கேந்தி பூ 25 ரூபாய் முதல் ரூ.30 வரை விலை கிடைத்தது. அப்போது விவசாயிகள் போதிய விலை கிடைக்காமல் நஷ்டம் அடைந்தனர். களையெடுத்தல், பூக்களைபறிக்க கூலி உள்ளிட்ட செலவுகள் கூட கட்டுபடியாகமல் சிரமப்பட்டனர். இதே நிலை நீடித்தால் பூக்களை பறிக்காமல் விடும் தருணத்தில் இருந்தனர்.இந் நிலையில் நவராத்திரி விழா தொடங்கியது. திருவிழாவினை முன்னிட்டு வியாபாரிகளிடம் இருந்து பல மடங்கு ஆர்டர்கள் கிடைத்தது விலையும் அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து விவசாயி முத்தாண்டியாபுரம் அய்யனசாமி கூறியது

கேந்தி பூக்களுக்கு எப்போதும் தேவை இருப்பதால் தொடர்ந்து இப்பகுதியில் கேந்தி பூக்களை விவசாயம் செய்து வருகிறோம். சென்ற மாதத்தில் கேந்தி பூக்களுக்கு தேவை குறைந்ததால் விலை 25 ரூபாய் முதல் முப்பது ரூபாய் வரை குறைவாக இருந்தது. ஆனால் நவராத்திரி விழா தொடங்கிய முதல் நாளில் இருந்து கேந்தி பூக்கள் ரூபாய் 60 முதல் 70 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டது.இருமடங்காக விலை உயர்ந்ததால் விவாசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்தார்.