• Sat. Feb 21st, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

மின்கசிவு ஏற்பட்டு விவசாயி பலி..,

ByArul Krishnan

Apr 7, 2025

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள கழுதூர் கிராமத்தைச் சேர்ந்த வேதமாணிக்கம் வயது 60 இவர் நேற்று இரவு தனக்கு சொந்தமான நிலத்தில் உள்ள வயலுக்கு மின் மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்ற நிலையில் மின்கசிவு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே வேதமாணிக்கம் பலியானார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வேப்பூர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.