• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பண்ணைக் கருவிகள் வழங்கும் விழா!

ByKalamegam Viswanathan

Mar 7, 2025

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வேளாண்மை கோட்டம் திருவேடகத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்துடன் பரவை மீனாட்சி மில் ஜிஎச்சிஎல் பவுண்டேஷன் சார்பாக வேளாண்மை பண்ணைக் கருவிகள் மானியத்தில் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு, வேளாண்மை இணை இயக்குநர் சுப்புராஜ் தலைமை தாங்கி விவசாயிகளுக்கு வேளாண்மை உபகரணப் பொருட்களை வழங்கினார். மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் தமிழ் செல்வன், முத்துக்குமரன்,நிதி பங்களிப்பு சமூக பொறுப்பு அலுவலர் சுஜீன் தர்மராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பழனியம்மாள் வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை உதவி இயக்குனர் பாண்டி விவசாய விவரங்கள் பதிவேற்றம், பிரதமரின் விவசாயிகள் ஊக்கத்தொகை, மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் ,மானிய விலையில் வழங்கப்படும் இடுபொருள்கள் பற்றியும்,வேளாண்மை அலுவலர் தீப ஞானசுந்தரி இடுபொருள்கள், உயிர் உரங்கள், இருப்பு பயன்பாடு குறித்தும் விளக்கிப் பேசினர். 57 விவசாயிகளுக்கு வேளாண்மை பண்ணை கருவிகள் கடப்பாரை, மண்வெட்டி, கதிர் அறுவாள், கொத்துவாள், இருப்பு தட்டு ஆகியவை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ,உதவி வேளாண்மை அலுவலர்கள் சரவணகுமார் பாண்டியராஜன் சந்திரசேகரன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரியா, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பூமிநாதன், அருணா தேவி உட்பட பலர் கலந்து கொண்டனர். துணை வேளாண்மை அலுவலர் பெருமாள் நன்றி கூறினார்.