• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கோவையில் ரசிகர்கள் கொண்டாட்டம்..,

BySeenu

Jun 5, 2025

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர்கள் கமலஹாசன் சிம்பு திரிஷா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள Thug Life திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. பல்வேறு இடங்களில் ரசிகர்கள் கொண்டாட்ட நிகழ்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவையில் பூ மார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் திரையரங்கிற்கு முன்பு மக்கள் நீதி மய்யம் கட்சியினர், கமல் மற்றும் சிம்பு ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில துணைத்தலைவர் தங்கவேலு இதில் கலந்துகொண்டு கேக் வெட்டி கொண்டாடினார். மேலும் மாற்றுத்திறனாளி ஜெயபிரபா என்பவரது மகள் ஷாலினிக்கு பத்தாயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டது.

திரையரங்கிற்கு முன்பு கூடிய ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் ஜமாப் செண்டை மேள்ம் மற்றும் மேலும் கமல் சிம்பு ஆகியோரின் திரைப்படப் பாடல்களுக்கு நடனமாடி மகிழ்ந்தனர்.