• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தமிழ் பிரபல நகைச்சுவை நடிகர் மனோபாலா காலமானார்

ByA.Tamilselvan

May 3, 2023

பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் மனோபாலா திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் பிரபல நகைச்சுவை நடிகரான மனோபாலா, இயக்குநர், தயாரிப்பாளர், காமெடி நடிகர் என திரையுலகில் பன்முக திறன் கொண்டு விளங்குபவர் மனோ பாலா(69), சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சில்க் சுமிதா, நாகேஷ், அஜித், விஜய் பல்வேறு திரை நட்சத்திரங்களுடன் இணந்து நடித்துள்ளார்.
நயன்தார உள்ளிட்ட நடிகைகளுக்கு அப்பாவாகவும் நடித்துள்ளார். சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாதியில் நிகச்சியில் இருந்து வெளியேறினார்.சிலமாதங்களுக்கு முன் இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின் ஆஞ்சியோ சிகிச்சை பெற்று குணமாகி நல்ல உடல் நலத்துடன் இருந்து வந்த நிலையில் திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக காலமானதாக தகவல் வெளியாகி உள்ளது.