• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பிரபல ரவுடி நீராவி முருகன் சுட்டுக்கொலை

பிரபல ரவுடி நீராவி முருகன் என்கவுன்ட்டரில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பிரபல ரவுடி நீராவி முருகன் திண்டுக்கல் தனிப்படை காவல் துறையினரால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நெல்லை களக்காடு அருகே மீனவன்குளம் என்ற இடத்தில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற போது சுட்டுக் கொன்றதாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள நீராவி மேட்டை சேர்ந்த இவர் ,சென்னை, தூத்துக்குடி , ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கடத்தல் ,கொலை ,கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டவர். முருகன் மீது 60க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவர் தனது கூட்டாளியான பவானி ஈஸ்வரன் கும்பலுடன் ஈரோடு மாவட்டத்தின் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வந்த நிலையில் கடந்த 2019 ஆம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்த இவர் தற்கொலை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது