• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் அருகே பிரபல ரவுடி வெட்டி கொலை..!

ByKalamegam Viswanathan

Oct 17, 2023

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே, நெல்லையைச் சேர்ந்த பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுக்கா ஆஸ்டியன்பட்டி அருகிலுள்ள கருவேலம்பட்டி ரயில்வே கேட் பக்கத்தில் ஆண் சடலம் ஒன்று நேற்று கிடந்தது. இது பற்றி தகவல் அறிந்த ஆஸ்டியன்பட்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. அவரது உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸாரின் விசாரணையில், அவர் நெல்லை மாவட்டம், பாளையசெட்டிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் என்பவரின் மகன் கிருஷ்ணகுமார் ( 30) என, தெரிந்தது. அவர் ஏற்கனவே ரவுடியான இவர் மீது கொலை உள்ளிட்ட சில வழக்கு நிலுவையில் இருப்பதும், முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக் கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். எஸ்பி சிவபிரசாத் உத்தரவின்பேரில் தனிப்படை போலீஸார் கொலையாளிகளை தேடுகின்றனர்.