• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பிரபல நடிகர் விச்சு விஸ்வநாத் மகளுக்கு விரைவில் திருமணம்

Byஜெ.துரை

Oct 16, 2023

தமிழ்த்திரைப்படங்களில் 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் நடிகர் விச்சு விஸ்வநாத். இவரது மகள் கோகிலாவின் திருமணம் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

பல திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் இத்திருமணத்தில் பங்கேற்கவுள்ளனர்.

தமிழ் திரையுலகில் இயக்குநர் மணிவண்ணன் இயக்கத்தில் 1990 ல் வெளியான, ‘சந்தனக்காற்று’ படம் மூலம் வில்லனாகத் திரையுலகில் கால்பதித்தவர் விச்சு விஸ்வநாத். வில்லனாக மட்டுமல்லாமல், குணச்சித்திரம், காமெடி எனப் பல படங்களில் ஜொலித்தவர்,
இதுவரை 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இயக்குநர் சுந்தர் சி உடைய நெருங்கிய நண்பரான இவர், அவருடன் 38 படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார்.

அரண்மனை, கலகலப்பு போன்ற பிரமாண்ட வெற்றிப்படங்களில் இவரது பாத்திரம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இவரது மகள் கோகிலா விஸ்வநாத் ஐடி துறையில் பணியாற்றி வருகிறார்.

இவருக்கும் ஜெர்மனியில் பணியாற்றி வரும் ஶ்ரீகாந்த் என்பவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் வரும் 23 நவம்பர் அன்று சென்னையில் பிரபலமான திருமண மண்டபத்தில், இருவீட்டார் ஆசியுடன் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

திருமண ஏற்பாடுகளை இரு வீட்டு பெற்றோர்களும் மும்முரமாகச் செய்து வருகின்றனர். இத்திருமணத்தில் பல திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இத்திருமணத்தில் பங்கேற்று வாழ்த்தவுள்ளனர்.