• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பிரபல நடிகர் ஜி.எம்.குமார் மருத்துவமனையில் அனுமதி…

Byகாயத்ரி

Jul 28, 2022

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் ஜி.எம்.குமார். இவர் கடந்த 1986ம் வருடம் சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு நடித்த அறுவடை நாள் திரைப்படத்தின் வாயிலாக இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து பிட் பாக்கெட், இரும்பு பூக்கள், உருவம் ஆகிய படங்களை இயக்கி இருந்தார். சென்ற 1993ம் வருடம் கேப்டன் மகள் என்ற திரைப்படத்தின் வாயிலாக நடிகராக உருவெடுத்தார்.

மக்களிடையே பேசப்பட்ட கதாப்பாத்திரங்களில் நடித்தவர். கடந்த 2011-ம் வருடம் பாலா இயக்கத்தில் வெளியாகிய அவன் இவன் திரைப்படத்தில் ஜமீன்தார் ஐனஸ் என்ற கதாப்பாத்திரத்தில் அவர் நடித்ததன் மூலம் அனைவராலும் அறியப்பட்டார். அதனை தொடர்ந்து மலைக்கோட்டை, மச்சக்காரன், குருவி, மாயாண்டி குடும்பத்தார், தாரதப்பட்டை, சரவணன் இருக்க பயமேன், கர்ணன் ஆகிய பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து இருந்தார். இந்த நிலையில் ஜி.எம்.குமார் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். நடிப்பின் வாயிலாக அனைவரையும் கவர்ந்த இவர் கூடியவிரைவில் குணமடைய ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகின்றனர்.