• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

இயக்குநர் பாரதிராஜாவுக்கு கொரோனா..!

இந்தியாவில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

திரையுலக பிரபலங்கள் மகேஷ் பாபு, அருண் விஜய், விஷ்ணு விஷால், சத்யராஜ், த்ரிஷா, குஷ்பு, மீனா, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் பலரும் தற்போது தொற்றிலிருந்து குணமடைந்து விட்டனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.