புதுச்சேரி அமைச்சருக்கு சொந்தமான இடத்தில் போலி மதுபானம் தயாரித்து, புதுச்சேரியில் தயார் செய்யப்பட்ட போலி மதுபானங்கள் தமிழ்நாடு டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்பட்டனர். 209 அட்டை பெட்டிகளில் 28 லட்சம் மதிப்புள்ள குவாட்டர் பாட்டில் இருந்த சம்பவம் தமிழக போலீசாரை அதிர வைத்து பரபரப்பை ஏற்படுத்தியது.
500 காலி மது பாட்டில்கள், 50 லிட்டர் எரிசாராயம், மூலப்பொருட்கள், கார்க், போலி ஹாலோ கிராம், இயந்திரங்கள் மற்றும் 35 காலி கேன்கள் பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் மண்டலம் மத்திய நுண்ணறிவு போலீஸாருக்கு புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. மத்திய நுண்ணறிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீஸார் புதுச்சேரி அருகே உள்ள பூத்துறையில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரி, காரை மடக்கி சோதனை செய்தனர்.
புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபானங்கள் இருந்தது. அதில் 209 அட்டை பாக்ஸில் ரூ. 28 லட்சம் மதிப்புள்ள குவார்ட்டர் பாட்டில்கள் இருந்தது. அவை போலிமதுபானம் என்பதை போலீஸார் கண்டறிந்தனர்.

இதையடுத்து லாரியை தமிழக போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக
மரக்காணம் ராஜசேகர், திருச்சி கருத்தபாண்டி, புதுச்சேரி பால் ஜோஸ் ,, ராமநாதபுரம் சித்திக் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது பரபரப்பான வாக்குமூலம் தந்துள்ளனர். அதில் புதுச்சேரி அடுத்து உளவாய்க்கால் என்ற இடத்தில் அட்டை நிறுவனம் வாடகை எடுத்து அந்த அட்டை கம்பெனி மத்தியில் போலி மதுபான தொழிற்சாலை உருவாக்கினோம். இதனால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. புதுச்சேரி சாராயம் மூலம் போலி மது தயாரித்தோம். அவற்றை தயாரித்து தமிழகம் எடுத்து சென்று மதுபார்களில் விற்பனை செய்கிறோம் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து குற்றவாளிகளை அழைத்து வந்து புதுச்சேரியில் போலி மது தயாரித்த இடத்தை போலீஸார் சோதனை செய்தனர். அங்கு, 500 காலி மது பாட்டில்கள், 50 லிட்டர் எரிசாராயம், மூலப்பொருட்கள், கார்க், போலி ஹாலோ கிராம், இயந்திரங்கள் மற்றும் 35 காலி கேன்கள் பறிமுதல் செய்தனர். இந்த இடம் பற்றி விசாரித்த போது, புதுச்சேரி வனத்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் குடும்பத்தினருக்கு சொந்தமான இடம் என்று தெரிந்தது.
இந்த இடத்தை வாடகை எடுத்து போலி மது தயாரித்தது தெரிந்தது.
ஏற்கெனவே சந்தனக்கட்டைகள் கடத்தி சென்ற விவகாரத்தில் சேலம் வனத்துறையினர் வழக்குப்பதிவு ஆனதும் இதே இடம் என்பது குறிப்பிடத்தக்கது.