மதுரையில் பத்தாம் வகுப்பு வரை படித்த போலி பெண் மருத்துவர் பிடிபட்டார்; போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை அரசரடி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் 10 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த ராணி என்ற பெண், மருத்துவ படிப்பு பயிலாமல் உடல்நலக்குறை ஏற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை பார்த்து வந்தது குறித்து, மருத்துவ மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குனர் செல்வராஜ்-க்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அந்த தனியார் மருத்துவமனையில் மருத்துவம் இணை இயக்குனர் செல்வராஜ் தலைமையில் மருந்தக அலுவலர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்த போது, அங்கு பணியாற்றிய ராணி பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தது உறுதியானதை தொடர்ந்து, அவரை மதுரை எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் மருத்துவம் இணை இயக்குனர் செல்வராஜ், ராணி மீது புகார் அளித்ததன் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து நகர் பகுதியில் மருத்துவம் பயிலாமல் பொதுமக்களுக்கு சிகிச்சை பார்த்த பெண் கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.