• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இன்ஸ்டாவிலும் லொகேஷன் அனுப்பும் வசதி

Byவிஷா

Nov 28, 2024

வாட்ஸப்பைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமிலும் இனி லொகேஷன் அனுப்புவதற்கான புதிய அம்சத்தை இன்ஸ்டா கொண்டு வந்துள்ளது.
மாறிவரும் நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சமூகவலைத்தளங்களில் எப்போதும் மூழ்கிக் கிடக்கின்றனர். பலருக்கு பல துறைகளில் உள்ள விஷயங்களை கற்றுத்தரும் விதமாகவும், பொழுதுபோக்கு அம்சமாகவும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல் சமூக வலைதளங்கள் செயல்பட்டு வருகின்றன. இதற்கு முன்னதாக வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே இருந்த சமூக வலைதளங்களில் ஏஐ வந்துவுடன்தான் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிகிறது.
இந்த சமூக வலைதளங்களில் தற்போது மக்களால் மிகவும் விரும்பப்படும் ஒன்றாக இன்ஸ்டாகிராம் இருப்பதால், எப்போதும் பல அப்டேட்டுகள் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்படும். அந்தவகையில் தற்போது லைவ் லொகேஷன் அப்டேட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் இந்த வசதி வாட்ஸப்பில்தான் இருந்தது. அதாவது கரெண்ட் லொகேஷன் மற்றும் லைவ் லொகேஷன் என இரண்டு வசதிகள் இருந்தன. கரெண்ட் லொகேஷன் என்றால் நாம் இருக்கும் இடத்தை அப்படியே ஷேர் செய்யலாம். லைவ் லொகேஷன் ஷேர் செய்தால், நாம் எங்கெல்லாம் போகிறோமோ அந்த லொகேஷனும் காண்பிக்கப்படும். இதனை நாம் 8 மணி நேரம் பகிரலாம்.
அந்தவகையில் இன்ஸ்டாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த அம்சத்தில் அதிகபட்சமாக 60 நிமிடங்கள் வரை லைவ் லொகேஷன் பகிர முடியும் எனக் கூறப்படுகிறது.
மேலும், லைவ் லொகேஷன் ஒருவருக்கு ஒருவராகவும், குரூப்களிலும் பகிர முடியும். அதே நேரத்தில், இதனை மற்றவர்களுக்கு பார்வேர்ட் செய்ய முடியாது என்றும் கூறப்படுகிறது. இதற்கான இன்டிகேட்டர் சம்பந்தப்பட்ட ஷேர் பாக்ஸில் இருக்கும் என்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது இதனை சில நாடுகளில் மட்டுமே கொண்டுவந்துள்ளதாகவும், விரைவில் மேலும் பல நாடுகளிலும் கொண்டுவரவுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

சிலர் வாட்ஸப் பக்கமே வராமல், எப்போதும் இன்ஸ்டாவில் இருப்பார்கள். மேலும் சிலர் அதையும் தாண்டி வாட்ஸப் போனிலேயே வைத்துக்கொள்ளாமல், அனைத்திற்கும் இன்ஸ்டாவே பயன்படுத்துவார்கள். அத்தகைய பயனாளர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.