• Tue. Feb 17th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

வாழைக்கன்று சிகிச்சைக் குறித்து செயல் விளக்கம்..,

ByKalamegam Viswanathan

Feb 17, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் மதுரை ஒத்தக்கடையில் உள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மதுரையை சேர்ந்த இறுதியாண்டு இளங்கலை வேளாண்மை பயிலும் மாணவி ஷாஜிதா பானு முள்ளிப்பள்ளம் கிராமத்தில் உள்ள விவசாயிகளின் வாழைத் தோட்டத்தில் வாழை கன்று சிகிச்சை முறை குறித்து செயல் விளக்கம் காட்டினார்.

இதனைப் பின்பற்றுவதன் மூலம் கிழங்கு அழுகல், பனாமா வாடல் நோய்,நெமாடோடு தாக்குதல், வேர் வளர்ச்சி குறைவு மற்றும் செடி மெதுவாக வளர்வதைத் தடுக்க முடியும் என்றும் விளக்கம் அளித்தார். மேலும் இது வேர் வளர்ச்சி அதிகரிக்கும், நோய்கள் குறையும், மகசூல் அதிகரிக்கும் மற்றும் செடி சீராக வளரும் எனவும் எடுத்துரைத்தார். முள்ளிப்பள்ளம் கிராம விவசாயிகள் இந்த பயிற்சியில் ஆர்வத்துடன் கலந்த கொண்டதுடன் இந்த பயிற்சி பயனுள்ளதாக இருந்ததாகவும் பிற்காலத்தில் அதனை தங்கள் நிலத்தில் முயற்சி செய்யப் போவதாகவும் உறுதியளித்தனர்.